ஒரு நாள் ஒரு அரசர் தன் அமைச்சர்களுள் ஒருவரை அழைத்துக்கொண்டு காட்டிற்குச் சென்றார். அந்த அமைச்சர் எப்பொழுதும் 'நடப்பதெல்லாம் நன்மைக்கே' என்னும் எண்ணம் கொண்டவர். காட்டில் சற்று நேரம் இளைப்பாற அவர்கள் ஒரு மரத்தடியில் அமர்ந்தனர். அரசர் ஒரு மாம்பழத்தை ருசிக்க அதனை அறுக்கும்போது தவறுதலாக கை விரலை அறுத்துக்கொண்டார். அமைச்சர் 'நடப்பதெல்லாம் நன்மைக்கே' என்றார்.
மன்னருக்கு கோவம் வரவே மறுநாள் அந்த அமைச்சரை சிறையிலிட்டு தனியே காட்டிற்குச் சென்றார். அப்போது சில காட்டு மிராண்டிகள் அவரை சிறை பிடித்து கொல்ல முயற்சித்தனர். ஆனால் அவர்கள் உடலில் காயம் உள்ளவர்களை கொல்ல மாட்டார்கள். அரசனின் கையில் விரல் அடியைப் பார்த்தவுடன் அவரை விடுவித்தனர்.
உடனே அரசர் அரண்மனைக்குச் சென்று அமைச்சரை விடுவித்து நடந்ததைக் கூறியதுடன் நன்றியும் கூறினார். மன்னர் மன்னிப்பு கேட்டபொழுது அமைச்சர் 'தாங்கள் என்னை சிறையிலடைத்தடும் நன்மைக்கே' என்றார். எவ்வாறு என்று வினவிய அரசரிடம், தான் வந்திருந்தால் அந்த காட்டு மிராண்டிகள் தன்னை கொன்றிருப்பரகள் என்று விளக்கினார்.
மன்னரும் மட்டற்ற மகிழ்ச்சியுடன் 'நடப்பதெல்லாம் நன்மைக்கே' என உணர்ந்தார்.
எல்லாம் நன்மைக்கே !!!
ReplyDeleteanna i was shocked to see this lines by you bcoz how you know this lines na bcoz this were used in tenaliraman film in 2014 but you wrote this in 2012
ReplyDeletewhere you read this lines na
This story was dramatized in my school.
Delete